கோவையில் அரசு பொருட்காட்சி - அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தனர்

கோவை சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சியை அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில்பாலஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கோவையில் அரசு பொருட்காட்சி - அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தனர்
Published on

அரசு சார்பில் ஆண்டுதோறும் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் பொருட்காட்சி நடத்தப்படவில்லை. இந்த நிலையில் 2 ஆண்டுகள் கழித்து கோவை சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி இன்று தொடங்கியது. இதனை அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில் பாலாஜி ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

இந்த பொருட்காட்சியில் செய்தி - மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாநகராட்சி, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை, பொதுப் பணித்துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்பட 31 அரசு துறைகள் சார்பில் தங்களது துறை சாதனைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து காட்சிக்கு வைத்திருந்தனர்.

வனத்துறை சார்பில் புலி மற்றும் காட்டு யானை உருவம் வைக்கப்பட்டு இருந்தது, மாநகர போலீஸ் சார்பில் பல்வேறு துப்பாக்கிகள், பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தன. இதுதவிர குழந்தைகளை கவரும் வகையில் ராட்டினம் உள்பட பல்வேறு விளையாட்டு உபரணங்கள் உள்ளன. இந்த பொருட்காட்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10, பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சமீரன், தி.மு.க. மாவட்ட பொருப்பாளர் நா.கார்த்திக், மேயர் கல்பனா, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்பட ஏராளமான அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com