அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி 95-வது ஆண்டு விழா

குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி 95-வது ஆண்டு விழா நடைபெற்றது.
அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி 95-வது ஆண்டு விழா
Published on

குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 95-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் ஆடிட்டர் மோகன், பி.பாபு, ஆர்.கோபாலகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீலிகிறிஸ்டி ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர்கள் சரவணபிரியா, ஹேமலதா உள்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சரளா தேவி நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com