

சென்னை,
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 'தமிழ்நாடு நாள்' நவம்பர் 1-ந்தேதி விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேசுகை
யில், “தமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கூறினார். இந்த முறை தமிழ்நாடு தினம் ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல்-அமைச்சர் விஜய் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்” என்றார்.
மேலும் இந்த விழாவில், எல்லைக்காவலர்களுக்கு உதவித்தொகையை உயர்த்தி அரசாணை வழங்கி, தமிழறிஞர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமைக்கான நூல் உரிமைத்தொகை மற்றும் மூளை நரம்பியத்துறை பேராசிரியர் டாக்டர் எம்.ஏ. அலீம் உள்ளிட்டோருக்கு, தமிழ்ச்செம்மல் விருது, குறள் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
அவர், 'திருக்குறள் பல்கலைக்கழகம்' ஒன்றை அமைக்கவும் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார். விழாவில், பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, 'தமிழ்வழிக் கல்வி முறையில் தமிழை ஒரு பாடமாக கல்வித்துறை அமைச்சர் கட்டாயப்படுத்த வேண்டும். அதேபோல், நமக்கான ஒரு கொடியை உருவாக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.