பேரம்பாக்கத்தில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை

பேரம்பாக்கத்தில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பேரம்பாக்கத்தில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை
Published on

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் காலனி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 39). இவர் பேரம்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். இவருக்கு கற்பகம் (32) என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் மது பழக்கத்திற்கு ஆளான ஹரிஹரன் அடிக்கடி மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

இதை அறிந்த அவரது மனைவி கற்பகம் ஏன் அடிக்கடி மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் உள்ளீர்கள் என்று தன்னுடைய கணவரை தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து 5 மாதங்களுக்கு முன்பு கற்பகம் கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்ற ஏக்கத்திலும், குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த ஹரிஹரன் நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது தந்தை புருஷோத்தமன் மப்பேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com