அரசு ஆஸ்பத்திரி ஊழியர் திடீர் சாவு

பாளையங்கோட்டையில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் திடீரென இறந்தார்.
அரசு ஆஸ்பத்திரி ஊழியர் திடீர் சாவு
Published on

பாளையங்கோட்டை மகாராஜநகர் அருகே ஜெயாநகரை சேர்ந்தவர் குருசாமி மகன் கார்த்திகேயன் (வயது 45). இவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com