ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் அரசு ஆஸ்பத்திரி நர்சு சாட்சியம்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் அரசு ஆஸ்பத்திரி நர்சு சாட்சியம்.
ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் அரசு ஆஸ்பத்திரி நர்சு சாட்சியம்
Published on

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு நேற்று மதுரை மாவட்ட முதலாவது செசன்சு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.அப்போது, சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி நர்சு கிருபை கிரேனாப் என்பவர் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், ஜெயராஜ்-பென்னிக்ஸ் இருவரையும் படுகாயங்களுடன் போலீசார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர்களுக்கு மருந்து செலுத்துவதற்காக ஊசியுடன் அவர்களிடம் சென்றேன்.இருவரின் இடுப்பு பகுதியிலும் கடுமையான காயங்கள் இருந்தை பார்த்தேன் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட எதிர்தரப்பினர் நர்சு கிருபையிடம், உடனடியாக இதுபற்றி டாக்டரிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.அதற்கு கிருபை, இவர்களைப்போல சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து ஏராளமானவர்கள் தங்களின் உடல்களில் கடுமையான காயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளனர். மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் அருகிலும் போலீசார் நின்று கொண்டு இருந்தனர். இதனால் இதுபற்றி நான் யாரிடமும் தெரிவிக்கவில்லை என்று வாக்குமூலம் அளித்தார் என்று ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பு வக்கீல் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com