51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனக் கடிதம் - மத்திய மந்திரி எல்.முருகன் வாழ்த்து

51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். அதோடு தமிழகத்தை சார்ந்த 65 இளைஞர்களும் இன்று தங்களது பணி ஆணைகளைப் பெற்றுக்கொண்டனர்.

சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில்பெட்டி தொழிற்சாலையில் (ICF) நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் (Rozgar Mela) கலந்துகொண்டேன், பணி ஆணை பெற்றவர்கள் ஒருங்கிணைந்த ரெயில்பெட்டி தொழிற்சாலை, தெற்கு ரெயில்வே, பரோடா வங்கி, அஞ்சல் துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட முக்கிய அரசுப் பணிகளில் சேவையாற்றுவார்கள்.

ஒவ்வொரு தேர்வு செய்யப்பட்ட இளைஞரும் நாட்டு மக்களுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் சேவை செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com