அரசுப் பணிகளில் நேரடி நியமனம்: வயது வரம்பினை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (30.10.2026) முதல் ஐந்து ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பணிகளில் நேரடி நியமனம்: வயது வரம்பினை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு
Published on: 

சென்னை,

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை ஐந்து ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

5 ஆண்டுகள்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை தற்போதைய விதிகளில் உள்ளதை விட 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இடஒதுக்கீட்டுப் பிரிவினர்

மேற்கண்ட வயது வரம்பு உயர்வானது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (BC, BC(M), MBC & DNC, SC, ST, ஆதரவற்ற விதவைகள்) ஏற்கனவே உள்ள வயதுச் சலுகையோடு கூடுதலாக அமையும்.

அவ்வாறு உயர்த்தப்படும் வயது உச்சவரம்பு உதாரணத்திற்குப் பின்வருமாறு அமையும்:-

வயது உச்சவரம்பு உயர்வு

இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (30.10.2026) முதல் ஐந்து ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும்.

தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவு மூலம், வயது வரம்பு முடிவடையும் நிலையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பயனடைவர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X