காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு தடைக்கல்லாக உள்ளது - அமைச்சர் துரைமுருகன் பேச்சு

காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு தடைக்கல்லாக உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு தடைக்கல்லாக உள்ளது - அமைச்சர் துரைமுருகன் பேச்சு
Published on

வேலூர்,

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கோரி கர்நாடக அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தத்தை கொடுத்து வருகிறது.

இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா முதல்-மந்திரியின் கருத்து சரியல்ல. கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு காவிரி வரலாறு குறித்து தெரியவில்லை என்று நினைக்கிறேன். காவிரி விவகாரத்தில் இப்போது வரை கர்நாடகா அரசு தடைக்கல்லாக உள்ளது. காவிரி விவகாரத்தில் இறுதி தீர்ப்பையும் ஏற்று கொள்ளாமல் கர்நாடகா அரசு வாதாடுகிறது" என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com