பெட்ரோல் நிலையம், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க தமிழக அரசு கட்டுப்பாடு விதிப்பு

பெட்ரோல் விற்பனை நிலையம், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க தமிழக அரசு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் நிலையம், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க தமிழக அரசு கட்டுப்பாடு விதிப்பு
Published on

சென்னை,

மாநில, மாவட்ட முக்கிய மற்றும் இதர நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் விற்பனை நிலையம், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைப்பதற்கான இடைவெளி எவ்வளவு என்பது தொடர்பாக கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளரிடம் இருந்து மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை, இதர சாலைகளில் சாலையோர பெட்ரோலிய சில்லரை விற்பனை நிலையங்கள், எரிவாயு சில்லரை விற்பனை நிலையங்கள், மின்சார வாகன சார்ஜிங் நிலையம் அமைப்பதற்கான தடையின்மை சான்று வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறை வழங்குமாறு முன்மொழிவு வழங்கியுள்ளார்.

இதை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு தடையின்மை சான்று வழங்குவதற்கான விதிகளை நிர்ணயம் செய்து ஆவன வழங்கி ஆணையிடப்படுகிறது.

அதன்படி நகர்ப்புறம் அல்லாத (கிராமப்புறம்) சமவெளி பகுதிகளில் மாநில சாலைகளில் 300 மீட்டர் இடைவெளியில், மாவட்ட முக்கிய, மாவட்ட இதர சாலைகளில் 200 மீட்டர் இடைவெளியில், நகர்ப்புறம் அல்லாத மலைப்பகுதிகளில் 100 மீட்டர்களில், நகர்ப்புற பகுதி சமவெளி பகுதிகளில் 100 மீட்டர்களில், சுங்கச்சாவடி, ரயில்வே லெவல் கிராசிங் 500 மீட்டர்களில், சாலை மற்றும் பாலத்துக்கு தூரத்தில் 200 மீட்டரில், உயர் மட்ட மேம்பாலம் தொடக்கப் பகுதியில் 300 மீட்டரில், 2 பெட்ரேலிய விற்பனை நிலையங்களுக்கு இடையில் கிராமம், நகரம், மலைப்பகுதிகளில் மாநில நெடுஞ்சாலையில் 300 மீட்டர், மாவட்ட முக்கிய, மாவட்ட இதர சாலை 200 மீட்டர்களில், கிராமப்புற பகுதிகளில் குறுகிய பாதை 100 மீட்டரில் வேகத்தடை பாதையில் 70 மீட்டர்களில் தூரம் விதிகளின்படி இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com