பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு அலுவலகத்திற்கு இடம் ஒதுக்கக்கூடாது

பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு அலுவலகத்திற்கு இடம் ஒதுக்கக்கூடாது என்று கலெக்டருக்கு பொதுமக்கள் மனு அனுப்பினர்.
பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு அலுவலகத்திற்கு இடம் ஒதுக்கக்கூடாது
Published on

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு இடம் ஒதுக்க பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் கேட்டிருந்தது. அதற்கு பொதுமக்கள் மற்றும் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளனர். அதில், விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு இடம் ஒதுக்க பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் கேட்டிருந்ததாக தெரியவந்தது. இப்பள்ளிக்கு ஏற்கனவே இடம் குறைவாக உள்ளது. 600 மாணவிகள் படித்து வந்த நிலையில் தற்போது 1,100-க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். வகுப்பறை கட்டிடங்கள் போக மீதி உள்ள இடத்தில்தான் விளையாட்டு மைதானம், கழிப்பறைகள் உள்ளது. இப்பள்ளி மாணவிகள் கல்வியில் மாவட்ட அளவில் சாதனை செய்து வருவதால் ஆண்டு தோறும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் கூடுதல் கட்டிடங்கள் கட்ட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இப்பள்ளி வளாகத்தில் வேறு அலுவலக கட்டிடத்திற்கு இடம் ஒதுக்கினால் நிச்சயம் இப்பள்ளிக்கு இடப்பற்றாக்குறை ஏற்படும். வேறு அலுவலகம் உள்ளே இயங்கும் பட்சத்தில் வெளி நபர்கள் வாகனங்களில் வந்து போகும்போது பள்ளியின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும். மாணவிகளுக்கு வெளி நபர்கள் தொந்தரவு கொடுக்கும் நிலையும் ஏற்படும். மேலும் இந்த அலுவலகத்திற்கு நில மாற்றம் செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் பள்ளி நிர்வாகத்தில் உள்ள யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. எனவே விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் வேறு எந்த ஒரு அரசு அலுவலகத்திற்கும் இடம் ஒதுக்கிதர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com