2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு


2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
x

மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு கிராம உதவியாளர் பணி விதிகள் - கிராம உதவியாளர்கள் நியமனம் - திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு கூடுதல் தலைமை செயலர் / வருவாய் நிர்வாக ஆணையர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பார்வை:

1) அரசாணை (எம்.எஸ்) எண் 625, வருவாய்த்துறை. நாள் 06.07.1995.

2) அரசாணை (எம்.எஸ்) எண் 521, வருவாய்த்துறை. நாள்17.06.1998.

3) அரசாணை (எம்.எஸ்) எண் 375, வருவாய்த் (பணி-8(1)) துறை, நாள்.19.10.2015.

4)அரசாணை (நிலை) எண் 574, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பணிகள் அலகு/பணி-8(1) பிரிவு, நாள் 17.10.2020

5) அரசாணை (நிலை) எண் 97 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 11.03.2024

6) இவ்வலுவல கடித எண் வ.நி 2(2)/ 02-28/1/2024 நாள் 17.03.2025 மற்றும் 26.05.2025

7) அரசாணை (நிலை) எண் 266, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 22.05.2025

8) அரசாணை (நிலை) எண் 312, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 04.06.2025

பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் கடிதங்களின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.

2) பார்வை (5) -ல் காணும் அரசாணையில் மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட 2,299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிட அனுமதி வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.

3 ) பார்வை (8) -ல் காணும் அரசாணையில், கிராம உதவியாளர்கள் தேர்வுமுறை மற்றும் பணிநியமனத்தின் போது மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அரசு ஆணையிட்டுள்ளது.

4) எனவே, பார்வை (8) -ல் காணும் அரசாணையினை பின்பற்றி, மேற்படி பார்வை (5)-ல் காணும் அரசாணையில் அனுமதிக்கப்பட்ட 2,299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story