அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்து - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் - சாதனை ஊக்கத்தொகை (Performance Incentive) - அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களுக்கு 2024-ம் ஆண்டிற்கான சாதனை ஊக்கத்தொகை வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை:

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நற்பணியினை கருத்திற்கொண்டும், உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் தொழில் அமைதி ஆகியவற்றில் ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களுக்கு குறிப்பிட்டதொரு தொகையை சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படுகின்றது.

அவ்வாறே 2024-ம் ஆண்டிற்கான சாதனை ஊக்கத்தொகை (Performance Incentive) அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களுக்கு கீழ்கண்டவாறு வழங்க அரசு இதன் வழி ஆணையிடுகிறது.

அ) 2024-ம் ஆண்டில் 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625/- (ரூபாய் அறுநூற்று இருபத்தைந்து மட்டும்) வழங்கப்படுகிறது.

ஆ) 2024-ம் ஆண்டில் 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 200 நாட்களுக்கு குறைவாகவும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195/- (ரூபாய் நூற்று தொண்ணூற்று ஐந்து மட்டும்) வழங்கப்படுகிறது.

இ) 2024-ம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 151 நாட்களுக்கு குறைவாகவும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.85/- (ரூபாய் எண்பத்தைந்து மட்டும்) வழங்கப்படுகிறது.

ஈ) 2024-ம் ஆண்டில் 90 நாட்கள் மற்றும் அதற்கு குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஒன்றும் வழங்கப்படாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com