தமிழகத்தின் 2 மாவட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு


தமிழகத்தின் 2 மாவட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
x
தினத்தந்தி 30 May 2025 7:32 PM IST (Updated: 30 May 2025 7:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் 2 மாவட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* தேனி மாவட்டத்தில், கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக பாசனத்திற்காக பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 200 கனஅடி வீதமும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரையும் சேர்த்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரை 120 நாட்களுக்கு தேவைக்கேற்ப 01.06.2025 முதல் நீர் இருப்பைப் பொறுத்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டம், உத்தமபாளையம், தேனி மற்றும் போடிநாயக்கனூர் தாலுக்காக்களில் உள்ள 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

* கன்னியாகுமரி மாவட்டத்தில், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1 மற்றும் 2 அணைகளிலிருந்து 01.06.2025 முதல் 28.02.2026 வரை வினாடிக்கு 850 கன அடி வீதம் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், கல்குளம் வட்டம், கிள்ளியூர் வட்டம், திருவட்டார் வட்டம், விளவங்கோடு வட்டம் மற்றும் அதனைச் சார்ந்த கிராமங்களில் உள்ள 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story