47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள மொத்தம் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
சென்னை,
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) பாசன பகுதிகளில் மொத்தம் 21,867 ஏக்கர் நிலங்களுக்கு, அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக வினாடிக்கு 700 கன அடி வீதம் 4233.60 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டம், அமராவதி புதிய பாசன பகுதிகளில் மொத்தம் 25,250 ஏக்கர் நிலங்களுக்கு, அமராவதி முதன்மை கால்வாய் வழியாக வினாடிக்கு 440 கன அடி வீதம் 2661.12 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், 19.09.2025 முதல் 31.01.2026 வரையிலான காலத்தில் மொத்தம் 134 நாட்களில், 70 நாட்கள் தண்ணீர் திறப்பு, 64 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற அடிப்படையில், மொத்தம் 6894.72 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அமராவதி அணையிலிருந்து, பாசனத்திற்காக, தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள மொத்தம் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த தகவல், தமிழக அரசு நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்டு உள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






