

சென்னை,
மறைந்த அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, சென்னை காமராஜர் சாலையில், தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்ததுடன் சிலைக்கு கீழே உருவப்படத்துக்கும் மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழக அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) இரா.பாஸ்கரன் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பொதுவாக, இதுபோன்ற நிகழ்வுகளில் அமைச்சர்களும் பங்கேற்பது வழக்கம். ஆனால், இந்த நிகழ்வில் அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை.