

சென்னை,
2021-22 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில், இலவச மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்பு பெட்டி மற்றும் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டங்களை பெறுவதற்கு பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கான வருமான வரம்பு 72 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனை நிறைவேற்றும் விதமாக வீட்டு மனைகள், தையல் இயந்திரங்கள் மற்றும் சலவை பெட்டிகள் ஆகியவற்றை பெறுவதற்கான பயனாளிகளின் ஆண்டு வருமானத்தின் உச்ச வரம்பை 72 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.