அரசு பள்ளி மாணவி முதலிடம்

மாவட்ட அளவில் நடந்த பேச்சுப்போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார்.
அரசு பள்ளி மாணவி முதலிடம்
Published on

தொண்டி, 

தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப்போட்டி ராமநாதபுரம் முகமது சதக்தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதில் திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 10-ம் மாணவி பா.டமித்தா கலந்து கொண்டு முதல் பரிசு வெற்றி பெற்றார். அவருக்கு முதல் பரிசுக்கான பரிசுத்தொகை ரூ.5ஆயிரம் வழங்கப்பட்டது. போட்டிக்கான தலைப்பு போட்டி நடைபெறும் இடத்தில் 5 நிமிடத்திற்கு முன்புதான் தெரிவிப்பார்கள். இதில் மாணவி டமித்தா மாவட்ட அளவில் முதல் பரிசினை பெற்று திருவாடனை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். வெற்றிபெற்ற மாணவியை தலைமை ஆசிரியர் திருவாசகமணி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர், மாணவிகள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com