பஸ் வசதி ஏற்படுத்த அரசு பள்ளி மாணவர்கள் வேண்டுகோள்

பஸ் வசதி ஏற்படுத்த அரசு பள்ளி மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பஸ் வசதி ஏற்படுத்த அரசு பள்ளி மாணவர்கள் வேண்டுகோள்
Published on

வேப்பந்தட்டை தாலுகா, கை.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் நூத்தப்பூர், சிறுநிலா கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளில், மாணவர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், நாங்கள் 39-வது நம்பர் அரசு டவுன் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருகிறோம். ஆனால் கடந்த சில நாட்களாகவே மாலை நேரத்தில் அந்த பஸ் வருவதில்லை. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளி முடிந்து சிரமத்துடன் வீட்டிற்கு நடந்து செல்கிறோம். எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி அந்த பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com