அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேச 2 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட சி.டி. - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேச 2 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட சி.டி. வழங்கப்படும் என கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேச 2 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட சி.டி. - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
Published on

ஈரோடு,

தமிழக அரசின் சார்பில் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, உழைக்கும் மகளிர் பயன்படக்கூடிய வகையில் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், மடிக்கணினிகள் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார். அதன் அடிப்படையில் இந்த அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

கியூஆர் கோடு மூலமாக பாடங்களை மாணவ, மாணவிகள் படிக்கும் திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத்தருவதற்காக ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச 2 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட சி.டி. தயாரிக்கப்பட்டு விரைவில் வழங்கப்படும். தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் குளறுபடி இருந்தால், அதுகுறித்து எழுத்துப்பூர்வமான புகார் கொடுத்தால் அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் 100 அரசு பள்ளிக்கூடங்களில் தலா ரூ.250 கோடி செலவில் விளையாட்டு அரங்கு மத்திய அரசு அனுமதியுடன் அமைக்கப்படும். கோபியை தலைநகரமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என சிலர் பேசி வருகிறார்கள். நான் கோபியைச் சேர்ந்தவன். எனக்கு கோபியை தலைநகரமாக கொண்டு ஒரு மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை உண்டு. ஆனால், அதை அமைப்பதற்கு 100 ஏக்கர் நிலம் தேவை. எல்லா மாவட்டத்தையும் பிரிப்பது தான் அரசின் நோக்கமாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com