

சென்னை,
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
நம்முடைய அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக கழக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்கள், முந்தைய கல்வியாண்டுகளில் மாணவ சேர்க்கையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவே, நடப்பு கல்வியாண்டிலும் தொடர்கிறது.
அரசுப்பள்ளிகளில் தரமான உட்கட்டமைப்பு, முன்னோடியான நலத்திட்டங்கள் என திராவிட மாடல் இட்ட அடித்தளம் இன்னும் பல கல்வியாண்டுகளுக்கு நிச்சயம் வலுவாக இருக்கும். அரசுப்பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல… பெருமையின் அடையாளம்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.