விஷ மாத்திரை தின்று அரசு ஊழியர் தற்கொலை

மகளிடம் ஏற்பட்ட தகராறில் சொத்தவிளை கடற்கரையில் விஷமாத்திரை தின்று அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
விஷ மாத்திரை தின்று அரசு ஊழியர் தற்கொலை
Published on

மேலகிருஷ்ணன்புதூர்:

மகளிடம் ஏற்பட்ட தகராறில் சொத்தவிளை கடற்கரையில் விஷமாத்திரை தின்று அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

சாலை பணியாளர்

புத்தளம் அருகே உள்ள வடக்கு தேரிவிளையை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது54). இவர் நாகர்கோவில் பொதுப்பணி துறையில் சாலை பணியாளராக பணியாற்றி வந்தார்.

தற்போது பொன்ராஜ் குடும்பத்துடன் வல்லன்குமாரன்விளை பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி காலனியில் வசித்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் பொன்ராஜூக்கும், அவரது ஒரு மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பொன்ராஜ் மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்றார்.

தற்கொலை

மாலையில் பொன்ராஜ் விஷ மாத்திரையை தின்று விட்டு சொத்தவிளை கடற்கரை பகுதியில் இருப்பதாக மகளிடம் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். உடனே, மகள் தாயார் ஏசுதங்கத்திடம் கூறினார்.

அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ஏசுதங்கம் உடனே, சொத்தவிளை கடற்கரைக்கு விரைந்து சென்று மயங்கிய நிலையில் கிடந்த கணவர் பொன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பொன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.

மகளிடம் ஏற்பட்ட தகராறில் அரசு ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com