தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு பணிகளை விரைவுபடுத்த அரசு முன்வர வேண்டும் - ராமதாஸ்

தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களுக்கு ஏற்படும் கூடுதல் பயண நேரம், எரிபொருள் செலவை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்கவும், பராமரிப்பு பணிகளை விரைவுபடுத்தவும் அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியாவின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கை நெடுஞ்சாலைகள் வகிக்கின்றன. ஸ்ரீநகர் தொடங்கி கன்னியாகுமரிவரை தற்போது நூற்றுக்கணக்கான நெடுஞ்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை பராமரிக்க தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் விடப்பட்டிருக்கிறது.

Also Read
தேர்தல் நேரத்தில் கோடைகால நிதி வழங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை - அமைச்சர் ரகுபதி
கோப்புப்படம்

சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுமார் 710 கிலோ மீட்டருக்கு செல்லும் என்.எச்.44 தேசிய நெடுஞ்சாலை உட்பட தமிழ்நாட்டில் மொத்தம் 4,974 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 2,724 கி.மீ நீள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மீதமுள்ள 2,250 கி.மீ. நீள சாலைகள் பராமரிப்புக்காக தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 1,228 சுங்கச்சாவடிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 78 சுங்கச்சாவடிகள் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் செயல்படுகின்றன. இது ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் முதல்தேதி சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படும்.

Also Read
ஒருங்கிணைந்த நிலப்பறவைகள் கணக்கெடுப்பு: விருப்பமுள்ள தன்னார்வலர்கள் பங்கேற்கலாம்
கோப்புப்படம்

டோல் கட்டணத்தின் ஒரு பகுதியை சாலை பராமரிப்பிற்கும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் சாலையோரம் குவிந்துள்ள மணல் மேடுகள் விரைந்து அகற்றப்படுவதில்லை. மேலும் சாலையில் பராமரிப்பு பணி (பேட்ச் ஒர்க்) முறையாக செய்யப்படாததால், பயணிகளுக்கு உடல் உபாதைகள் மற்றும் விபத்துகள் ஏற்படுகிறது. ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் உள்ள கழிவறைகள் முறையாக பராமரிக்காததால் மோசமாக உள்ளது.

இதற்கிடையே செங்கல்பட்டு முதல் உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி வரையிலான 151 கிலோ மீட்டரில் புக்கத்துறை, படாளம், மதுராந்தகம், திண்டிவனம், விக்கிரவாண்டி, ஆகிய 5 இடங்களில் மேம்பாலப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் 151 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும்போக்குவரத்து நெரிசல் சாதாரண நாட்களிலேயே ஏற்படுகிறது. இந்த நெரிசல் தொடர் விடுமுறை நாட்களில் 5 மடங்காக அதிகரிக்கிறது. இதனால் பொதுமக்களின் பயண நேரமும், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. இதனை தவிர்க்க மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்.

Also Read
இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பி பெண்ணிடம் ரூ.8.45 லட்சம் மோசடி - வாலிபர் கைது
கோப்புப்படம்

மேலும் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையையொட்டி மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிதி ஒதுக்கீடு செய்தும், இன்னமும், மாவட்ட நிர்வாகம் நிலம் கையகப்படுத்தி கொடுக்காததால் அப்பணி தொடங்கப்படாமல் உள்ளது. உடனடியாக அதற்கான பணிகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com