

சென்னை,
தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி தமிழக அரசு டாக்டர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசு டாக்டர்கள் 4 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு டாக்டர்கள் 15 ஆண்டுகள் கழித்து பெறுகின்ற நிலை உள்ளது. ஊதிய உயர்வு வழங்க கோரி அரசு டாக்டர்கள் உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு அரசு டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்தது. ஆனால் உறுதி அளித்தபடி டாக்டர்களின் ஊதியத்தை தமிழக அரசு தற்போதுவரை உயர்த்தவில்லை. எனவே அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.