

தூத்துக்குடி
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
தூத்துக்குடி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரபடுத்தி வருகின்றது.
அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரில் 10% பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளது. தற்போது பெய்யத் தொடங்கியுள்ள பருவமழை சுகாதாரத் துறைக்கு சவாலாக இருக்கும் என கூறினார்.