நீட் தேர்வு விலக்கு பெறுவதே தமிழக அரசின் இலக்கு : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்
நீட் தேர்வு விலக்கு பெறுவதே தமிழக அரசின் இலக்கு : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை,

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார் அப்போது அவர் கூறியதாவது ;

நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். தமிழக மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசுக்கு விரைவில் உரிய பதில் அளிக்கப்படும் மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் கேட்ட கேள்விகளுக்கு பதில் தயாராகி உள்ளது..நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழக அரசின் இலக்கு. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி உள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com