கவர்னர் காலம் தாழ்த்துவது சரியல்ல; மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாவளவன் பேட்டி

ஆளுநர் காலம் தாழ்த்துவது சரியல்ல. சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கூறியிருக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
கவர்னர் காலம் தாழ்த்துவது சரியல்ல; மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாவளவன் பேட்டி
Published on

தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் 11 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் நேற்று ஆதரவு அளித்தது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ள நிலையில், இன்னும் பெரும்பான்மைக்கு 6 எம்.எல்.ஏக்கள் தேவைப்படுகிறார்கள்.

இதனால், கம்யூனிஸ்டுகள் மற்றும் விசிகவிடம் விஜய் ஆதரவு கோரியுள்ளார். இந்த சூழலில், திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு திருமாவளவன் கூறியதாவது: ``ஆளுநர் காலம் தாழ்த்துவது சரியல்ல. சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கூறியிருக்க வேண்டும். விஜய் காங்கிரஸ் ஆதரவை பெற்றதால் பாஜகவுக்கு ஆத்திரம். அதனால்தான் விஜய்க்கு இடையூறு செய்கிறார்கள்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com