ராம.கோபாலன் சமாதியில் தேம்பி அழுத கவர்னர் இல.கணேசன்

ராம.கோபாலன் சமாதியில் தேம்பி அழுத கவர்னர் இல.கணேசன்.
ராம.கோபாலன் சமாதியில் தேம்பி அழுத கவர்னர் இல.கணேசன்
Published on

திருச்சி,

மணிப்பூர் மாநில கவர்னராக இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன். இவர் காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்காக திருச்சிக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் கார் மூலம் அவர் காரைக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.

அங்கிருந்து மாலையில் திருச்சிக்கு வந்த அவர், திருச்சி அருகே சீராத்தோப்பு பகுதியில் உள்ள இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம.கோபாலனின் சமாதிக்கு சென்றார். அங்கு ராம.கோபாலன் புகைப்படத்தை பார்த்து கைகளை கூப்பி வழிபட்ட அவர், தேம்பி அழுதார். உடனே அருகில் இருந்த இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. பிரமுகர்கள் அவரை சமாதானம் செய்தனர். இதையடுத்து சமாதி முன் அமர்ந்து தியானம் செய்த அவர், பின்னர் அங்கு கட்டப்பட்டு வரும் நினைவிடத்தை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து இரவில் விமானம் மூலம் சென்னைக்கு அவர் புறப்பட்டு வந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com