திருக்குறள் குறித்து வேண்டுமென்றே கவர்னர் வம்பு இழுக்கிறார்-கார்த்திக் சிதம்பரம் கருத்து

திருக்குறளில் ஆன்மிக கருத்து உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
திருக்குறள் குறித்து வேண்டுமென்றே கவர்னர் வம்பு இழுக்கிறார்-கார்த்திக் சிதம்பரம் கருத்து
Published on

சிவகங்கை,

சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-மேல்-சபை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பம் வைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி, சசிதரூருக்கு தகுந்த மரியாதை கொடுக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.

தங்க நகைக்கடன் பெறுவதில் 2 விதமான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. இது நடுத்தர மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும். மத்தியில் உள்ள அரசு, அடித்தட்டு மக்களின் வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பது தெரியாமல் ஆட்சி செய்கிறார்கள். இந்த விதிமுறைகளை முழுமையாக தளர்த்த வேண்டும்.

திருக்குறளில் ஆன்மிக கருத்து உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் கவர்னர் ரவி கூறுவது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது. திருக்குறள் குறித்து கவர்னரை பொறுத்தவரை அவர் வேண்டுமென்றே வம்பு இழுக்கும் ஆளாக உள்ளார்.ஆபரேஷன் சிந்தூரை முழுமையாக காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.'இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com