தமிழ்நாட்டின் அடையாளங்களை அழிக்க கவர்னர் முயற்சி செய்கிறார் - உதயநிதி ஸ்டாலின்

நீங்கள் திமுகவில் இணைந்ததை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு வயிறு எரியும் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் அடையாளங்களை அழிக்க கவர்னர் முயற்சி செய்கிறார் - உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை,

நாதகவினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

நீங்கள் கழகத்தின் கொள்கையை ஏற்று இயக்கத்தில் சேர்ந்திருக்கின்றீர்கள். திமுக இன்று 75வது ஆண்டில் பவள விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் வந்து விட்டீர்கள், ஆனால் உங்களைப்போல ஆயிரக்கணக்கானோர் வருவதற்கு சில தயக்கத்தோடு அங்கு இருப்பார்கள். அவர்களிடம் எடுத்துச் சொல்லி, அத்தனை பேரையும் கழகத்தில் இணைக்க வேண்டிய முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும்.

தேர்தல் காலங்களில் ஆளுங்கட்சியை எதிர்த்து எதிரணியில்தான் அனைவரும் ஒன்று சேர்வார்கள். ஆனால், இன்று எதிர்க்கட்சியில் இருந்த நீங்கள், ஆளுங்கட்சியில் உங்களை இணைத்துள்ளீர்கள் என்றால் 2026 தேர்தல் முடிவுகள் உங்களுக்கு தெரிந்திருக்கக் கூடிய ஒன்றுதான். இதை பார்க்கும் போது எதிர்க்கட்சியினருக்கு வயிற்று எரிச்சல் வரத்தான் செய்யும். அதற்காகவே மீண்டும் உங்களுக்கு பாராட்டும், வாழ்த்தும்.

மத்திய அரசு சார்பாக ஒருத்தரை அனுப்பி வைத்துள்ளார்கள். அவர் தான் நம்முடைய கவர்னர். அவர் என்ன மக்களால் தேர்தெடுக்கப்பட்டவரா? மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவர். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார். நம்முடைய தமிழ்நாட்டின் அடையாளங்களை ஒவ்வொன்றாக அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். திருவள்ளுவருக்கு காவிய சாயம் பூசுவது. தமிழ்த்தாய் வாழ்த்தை கொச்சைப்படுத்துவது. தமிழ்த்தாய் வாழ்த்தை பாடக்கூடாது என சொல்வது. சட்டசபையை புறக்கணித்து செல்வதுதான் அவருடைய வேலை என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com