

சென்னை,
தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு விசிகவும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. இதனால், தவெக ஆதரவு எம்.எல்.ஏகளின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மை பலம் உள்ளதால் ஆளுநரை மீண்டும் சந்திக்க விஜய் புறப்பட்டார். ஆனால் அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதையடுத்து நடு வழியில் விஜய் மீண்டும் பட்டினப்பாக்கம் திரும்பினார். இந்த நிலையில், ஆளுநரின் செயல்பாட்டை இந்திய கம்யூனிஸ்ட் விமர்சித்துள்ளது. வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள் தீர்ப்பை ஆளுநர் மதிக்க வேண்டும். அரசமைப்பின் படி அவர் செயல்பட வேண்டும். ஆட்சியமைக்க உரிமை கோர வந்த விஜய்யை ஆளுநர் அலைக்கழிப்பது சரியல்ல” என்றார்.