பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் சாமி தரிசனம்

சிவகங்கை அருகே திருக்கோஷ்டியூர் சௌமியநாராயண பெருமாள் கோவில், பிள்ளையார்பட்டி கோவில்களில் மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் சாமி தரிசனம் செய்தார்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் சாமி தரிசனம்
Published on

சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது.

இத்திருக்கோவிலுக்கு பா,ஜ,க.வின் முன்னாள் மாநிலத் தலைவரும் தற்போதைய மணிப்பூர் ஆளுநருமான இல.கணேசன் வருகை தந்து கற்பக விநாயகரை தரிசனம் செய்தார். ஆளுநருக்கு பிள்ளையார்பட்டி அறங்காவலர்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தரிசனம் முடித்த அவர் அங்கிருந்து திருக்கோஷ்டியூர் சௌமியநாராயண பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியோன், திருக்கோஷ்டியூர் மஹா ஸ்வாமிநீ பீடம் பாண்டியராஜன் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினர்.

இந்நிகழ்வில் பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com