காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்
Published on

சென்னை,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி தொகுதி எம்.பி. எச். வசந்தகுமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 70. கடந்த 10ந்தேதி உடல்நலம் பாதிக்கப்பட்ட பின்னர், சென்னையில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமடைந்தது.

அவருக்கு சுவாச பாதிப்பும் ஏற்பட்டதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவருக்கு அளித்து வந்த சிகிச்சை பலனின்றி இன்றிரவு 7 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிற பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஏழை, எளிய மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் என அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

எம்.பி. வசந்தகுமாரின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவரது இழப்பு தமிழகத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com