

சென்னை,
பொங்கல் மற்றும் சங்கராந்தியை முன்னிட்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சி, வளம் பெருக வாழ்த்துவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து தனக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சருக்கு,கவர்னர் தனது நன்றியையும், பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்து மலர்கொத்துடன் பதில் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பொங்கல் திருவிழாவில், தங்களுக்கும், தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி, வளம் பொங்க வாழ்த்துவதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குறிப்பிட்டுள்ளார்.