4 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்


4 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
x

18 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

சென்னை,

கடந்த மார்ச் 14 முதல் ஏப். 29 வரை நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர் என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட நாட்களாக கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில் இன்று 4 சட்ட திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். 4 மசோதாக்களையும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.

1 More update

Next Story