தேசிய உச்சரிப்பு போட்டியில் சாம்பியன்: அமெரிக்கவாழ் சென்னை மாணவிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

தேசிய உச்சரிப்பு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்கவாழ் சென்னை மாணவிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து கூறியுள்ளார்.
தேசிய உச்சரிப்பு போட்டியில் சாம்பியன்: அமெரிக்கவாழ் சென்னை மாணவிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
Published on

சென்னை,

சென்னையை பூர்வீகமாக கொண்டு அமெரிக்காவில் வசிக்கும் லோகன் ஆஞ்சநேயுலு, ராம் பிரியா தம்பதியரின் 8-ம் வகுப்பு படிக்கும் மகள் ஹரிணி, அந்நாட்டில் நடைபெற்ற 'ஸ்கிரிப்ஸ் தேசிய உச்சரிப்பு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த நிலையில் பெற்றோருடன் சென்னை வந்த மாணவி ஹரிணியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டி ராஜ்பவனுக்கு வரவழைத்து, மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். அப்போது கவர்னரின் மனைவி லட்சுமி, முதன்மை செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி. பேசுகையில், ' மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் வாசிப்பு திறனை வளர்த்துக் கொள்ள கடினமாக கற்க வேண்டும். தோல்விகளை கண்டு துவளாமல், வெற்றியை நோக்கி செல்வதில் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com