'கவர்னர் ஆர்.என்.ரவி தனக்கு இல்லாத அதிகாரத்தை தானே எடுத்துக் கொள்கிறார்' - வைகோ பேட்டி

இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
'கவர்னர் ஆர்.என்.ரவி தனக்கு இல்லாத அதிகாரத்தை தானே எடுத்துக் கொள்கிறார்' - வைகோ பேட்டி
Published on

சென்னை,

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறும் எந்த ஒரு வார்த்தையும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"கவர்னர் ஆர்.என்.ரவி தனக்கு இல்லாத அதிகாரங்களை தானே எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முதல்-அமைச்சர் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கும் போது, இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று எல்லோரும் பாராட்டும் நேரத்தில் கவர்னர் குறுக்கே புகுந்து உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறும் எந்த ஒரு வார்த்தையும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒன்று அவரை நீக்க வேண்டும், அல்லது அவரே ராஜினாமா செய்துவிட்டு இந்துத்துவா ஏஜெண்டாக வேலை செய்யலாம்" என்று வைகோ தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com