மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் குண்டர் சட்டம்: மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்


மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் குண்டர் சட்டம்: மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
x

மசோதா ஏப்ரல் 29ம் தேதி சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை

தமிழகத்தில் உயிரி மருத்துவக்கழிவுகளை (பயோ மெடிக்கல் வேஸ்ட்) பொது இடங்களில் கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா ஏப்ரல் 29ம் தேதி சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையிலான சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

1 More update

Next Story