மதுரையில் 10 ஆயிரம் மாணவர்களுடன் சேர்ந்து யோகா செய்த கவர்னர் ஆர்.என்.ரவி

உலகம் முழுவதும் 11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரையில் 10 ஆயிரம் மாணவர்களுடன் சேர்ந்து யோகா செய்த கவர்னர் ஆர்.என்.ரவி
Published on

உலகம் முழுவதும் 11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற கருப்பொருளுடன் 191 நாடுகளில் இன்று யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். மதுரையில் தனியார் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த யோகா தின நிகழ்ச்சியில் 10 மாணவர்களுடன் சேர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி யோகா செய்தார். நிகழ்ச்சியின்போது 51 முறை தண்டால் எடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி மாணவ,மாணவியரை உற்சாகப்படுத்தினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com