அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பும் கவர்னர் ஆர்.என். ரவி: அன்பில் மகேஷ் கண்டனம்


அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பும் கவர்னர் ஆர்.என். ரவி: அன்பில் மகேஷ் கண்டனம்
x

அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் எண்ணிலடங்காதது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

சென்னை,

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருந்தார் . இந்த நிலையில் கவர்னர் ஆர்.என். ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

ஆர்.எஸ்.எஸ். மனநிலையுடன் எப்போதும் அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பும் கவர்னர் அவர்களே…

ஏழை மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை உள்ளவர் போல, “நானும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன்” என்பதை காட்டிக்கொள்வதற்காக நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கல்வித்துறையை நோக்கி இப்படி பேசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது. எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் எண்ணிலடங்காதது. சாதனையாளர்களை மக்களும் திராவிட மாடல் அரசும் கொண்டாடி வருகிறது.

கமலாலயத்தின் ASER எனும் போலி அறிக்கையை உயர்த்திப்பிடிக்கும் நீங்கள், அரசுப் பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி “தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?” என்று கேளுங்கள்.என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story