சிறுவாபுரியில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

கவர்னரின் வருகையையொட்டி, இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
சிறுவாபுரியில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்
Published on

சென்னை,

சிறுவாபுரி முருகன் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம். கோவில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. சிறுவாபுரி சாலை வயல்வெளிக்கு மத்தியில் குறுகலான சாலை என்பதால், கவர்னரின் வருகையையொட்டி, இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. 4 சக்கர வாகனங்கள் புதுவாயல், பெரியபாளையத்தை சுற்றி மாற்று வழியில் சிறுவாபுரி அனுப்பிவைக்கப்பட்டன.

இது தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

"திருவள்ளூரில் உள்ள அருள்மிகு சிறுவாபுரி பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாகத்தில் முருகப்பெருமானை தரிசித்து பூஜித்த பாக்கியம் பெற்றேன். தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகள், உலகம் முழுவதும் உள்ள அனைத்து பக்தர்களின் நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், பாரதத்தின் மகிமைக்காகவும் வேண்டிக் கொண்டேன். முருகப்பெருமான் நமக்குத் தேவையான பலத்தையும் ஞானத்தையும் அளித்து, வளர்ச்சியடைந்தபாரதம்2047 என்ற நமது தேசிய இலக்கை நிறைவேற்ற நம்மை வழிநடத்துவாராக."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com