மாதவரத்தில் நாக கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கவர்னர் சாமி தரிசனம்

மாதவரத்தில் நாக கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கவர்னர் சாமி தரிசனம் செய்தார்.
மாதவரத்தில் நாக கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கவர்னர் சாமி தரிசனம்
Published on

சென்னையை அடுத்த மாதவரம் கல்கட்டா ஷாப் அம்பேத்கர் நகர் பகுதியில் நாக கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் 4-வது வாரத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு கூழ் ஊற்றுதலும் நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று காலை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்துடன் நாக கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். உற்சவர் அம்மனுக்கு கவர்னரே மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டார்.

முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com