

வேலூர்,
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னரின் பதிலை, சுப்ரீம்கோர்ட்டில் மனுவாக மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், முடிவு எடுக்க ஜனாதிபதியே முழு அதிகாரம் படைத்தவர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவை எடுத்த முடிவை ஆளுனர் நிறைவேற்றி இருக்க வேண்டும் என்றும், ஆனால் நாடகம் ஆடுகிறார்கள் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரிடத்தில் மறைத்து பேசுவது, ஆளுனருக்கு ஏற்புடையது அல்ல என்றார். மேலும் இந்த விவகாரத்தில், குடியரசுத் தலைவர் மெளனம் காட்டி மோசடி செய்யக்கூடாது என்று துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.