திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்த கவர்னர்;மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே வெளியேறிய கவர்னர்

திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்த கவர்னர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய கவர்னர் ரவி
திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்த கவர்னர்;மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே வெளியேறிய கவர்னர்
Published on

சென்னை

தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை கவர்னர் முறையாக படிக்கவில்லை; உரையில் கவர்னர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது.

என சட்டப்பேரவையில் கவர்னர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி கவர்னர் செயல்பட்டுள்ளார்.அச்சிடப்பட்டது இல்லாமல் கவர்னர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திராவிட மாடல் மட்டுமின்றி பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் பெயர்களையும் ஆளுநர் படிக்காமல் புறக்கணித்தார். அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு. உரையில் இடம் பெறாமல் ஆளுநர் சொந்தமாக சேர்த்து கொண்டவை அவை குறிப்பில் இடம் பெறாது என முதல்வர் கூறினார்.

அரசு தயாரித்து கொடுத்த உரையை முறையாக படிக்காத ஆளுநருக்கு பேரவையில் முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார். அரசு தயாரித்த, ஆளுநரால் இசைவளிக்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையை முறையாக படிக்காதது வருந்தத்தக்கது. ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன் எங்கள் எதிர்ப்பு எதையும் பதிவு செய்யவில்லை எனவும் ஸ்டாலின் கூறினார்.

முதல்- அமைச்சர் பேசியதும் கவர்னர் பாதியில் புறப்பட்டார்.சட்டப்பேரவையில் அரசின் உரையில் பல பகுதிகளை தவிர்த்தற்கு, முதல்- aமைச்சர் கண்டனத்தை அடுத்து பாதியில் வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com