கவர்னர் விவகாரம்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.
கவர்னர் விவகாரம்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு
Published on

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் கவர்னருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது போல, எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் கவர்னர்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் கவர்னர்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை தேவை என்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பாக கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஜனநாயகத்துக்கு எதிரான கவர்னர்கள் செயல்பாடு தொடர்பாக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.

தொலைபேசியில் தொடர்பு கொண்டு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்ததாக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள் கூட்டத்தை கூட்டுமாறும் மம்தா பானர்ஜி யோசனை தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com