தமிழிசைக்கு கவர்னர் பதவிதான் சரியாக இருக்கும்- உதயநிதிஸ்டாலின்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் தோல்வியை மயிலாப்பூரில் இருந்து தொடங்குவோம் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழிசைக்கு கவர்னர் பதவிதான் சரியாக இருக்கும்- உதயநிதிஸ்டாலின்
Published on

மயிலாப்பூர்,

சென்னை மயிலாப்பூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:-

எடப்பாடியாரை பத்து தோல்வி பழனிசாமி என்று கூறுவது போல இந்த தொகுதியில் பாஜகவின் வேட்பாளரை ஆறு தோல்வி தமிழிசை என்று கூறலாம். தென் மாவட்டங்களில் இருந்து வட மாவட்டம் வரை தேர்தலில் நின்ற இடங்களில் எல்லாம் தோல்வியை தான் பெற்றிருக்கிறார். என்றைக்குமே மக்கள் தமிழிசையை ஏற்றுக் கொள்வதில்லை. அவருக்கு கவர்னர் பதவி தான் சரியாக இருக்கும். தமிழிசையை மீண்டும் நாம் கவர்னராக ஆக்குவோம். அந்த வேலைய நாம் அனைவரும் இணைந்து பார்ப்போம்

முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலின் அவருடைய கொள்கை தலைவர் கலைஞர் பிறந்த திருவாரூர் தொகுதியில் இருந்து பிரசாரத்தை ஆரம்பித்தார். நான் அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இருந்து பிரசாரத்தை ஆரம்பித்தேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி மயிலாப்பூரில் இருந்து பிரசாரம் தொடங்கியிருக்கிறார். ஏனென்றால் அவருடைய தலைமை அலுவலகம் டெல்லி அணி. ஆகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் தோல்வியை மயிலாப்பூரில் இருந்து தொடங்குவோம். திமுகவின் வெற்றிக்கு அனைவரும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்போம் .

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com