

சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து, அதை பின்பற்றுவதே சிறப்பு என வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்க கோரி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி என்பவர் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி மனு அனுப்பி இருந்தார்.
அதில், சனாதன தர்மம் குறித்து அதிகம் பேசும் நபராக இருப்பதால், அதுகுறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க சரியான நபர் என குறிப்பிட்டு, 19 கேள்விகளை மனுவில் முன்வைத்துள்ளார்.
அதன்படி,
இந்த கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்கும்படி கோரிக்கை வைத்திருந்தார். தற்போது இந்த கேள்விகள் தொடர்பாக கவர்னர் மாளிகை ஒரு விளக்கம் அளித்துள்து. அதில், சனாதன தர்மம், இந்து மதம் அதன் அர்த்தம் குறித்து கவர்னர் பேசிய தகவல்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.