கவர்னரின் தேநீர் விருந்து: அ.தி.மு.க, பா.ஜ.க பங்கேற்பு

விசிக, நாதக, தவெக, மதிமுக கட்சிகள் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன.
கவர்னரின் தேநீர் விருந்து: அ.தி.மு.க, பா.ஜ.க பங்கேற்பு
Published on

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா தேநீர் விருந்தில் கலந்துகொள்ள திமுக, அதிமுக, பாஜக, தவெக, நதக, விசிக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில், இன்று மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து தொடங்கியது. இதில், பாஜக, அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சரத்குமார், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

தமிழக அரசுக்கு எதிராக கவர்னர் செயல்படுவதாக தெரிவித்து, தமிழக அரசு மற்றும் திமுக தேநீர் விருந்தை புறக்கணித்தன. அதேபோல, விசிக, நாதக, தவெக, மதிமுக கட்சிகள் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com