லாரி மீது அரசு பஸ் மோதல்

லாரி மீது அரசு பஸ் மோதியது.
லாரி மீது அரசு பஸ் மோதல்
Published on

துறையூர்:

திருச்சியில் இருந்து அரசு பஸ் ஒன்று துறையூர் நோக்கி வந்தது. அந்த பஸ் துறையூரில் உள்ள திருச்சி சாலையில் வந்தபோது முன்னால் டேங்கர் லாரி ஒன்று சென்றது. அப்போது சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது மோதாமல் இருக்க டேங்கர் லாரி டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்தார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ், டேங்கர் லாரி மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்ததோடு, கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பயணிகள் மற்றும் டிரைவர் உள்ளிட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில் துறையூர் நகராட்சியில் தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவற்றை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பலமுறை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை தெரு நாய்கள் பிடிக்கப்படவில்லை என்று பாதுமக்கள் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவரை தெருநாய் கடித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com