

சென்னை,
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் கருங்குழி அருகே வந்த போது நிலை தடுமாறி சாலை தடுப்பின் மீது மோதியது.
சாலை தடுப்பின் மீது மோதிய அரசுப் பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பயணிகளில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.